This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, July 16, 2017

வெரிகோஸ் நரம்பை குணப்படுத்தும் பச்சை தக்காளி


நாம வயதாகுகிறோம் என்றால் நமது உடல் மெட்டா பாலிசத்தின் வேகம் மெதுவாகி விடும், செல்கள் எல்லாம் ரிஜெனரேட் ஆகும். உங்கள் முழு உடலும் வயதாகுவதற்கான மாற்றங்களை ஏற்படுத்தும் அல்லவா.
டயாபெட்டீஸ், ஹைபர் டென்ஷன், இதய நோய்கள், மூட்டு வலி,ஆர்த்ரிடிஸ் போன்றவை பொதுவாக வயதான பிறகு வருகின்ற பிரச்சினைகள் ஆகும்.
ஆனால் இப்பொழுது 50 வயதானவர்களை வெரிகோஸ் வெயின் தாக்குகிறது. இது பாலினத்தை பார்த்து வருவதில்லை. இருப்பினும் பெண்களை அதிகமாக தாக்குகிறது என்கின்றனர்.


வெரிகோஸ் வெயின் என்பது நமது உடலில் உள்ள இரத்தம் வேற பகுதிக்கு செல்ல முடியாமல் இரத்த நரம்புகளிலே தங்குவதால் நரம்புகள் புடைத்து மற்றும் விரிவடைவதாகும். இதை குணப்படுத்துவதற்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும்.
இந்த வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம் அதிகமான உடல் எடையால் இரத்த அழுத்தம் அதிகமாவது ஆகும்
இதுவரைக்கும் இதை குணப்படுத்தவே முடியவில்லை .
அறுவைச் சிகிச்சை செய்து அதை சரி செய்ய மட்டுமே செய்கின்றனர். ஆனால் இந்த வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குறைக்க இங்கே ஒரு இயற்கை முறை கொடுக்கப்பட்டுள்ளது . இது கண்டிப்பாக உங்களுக்கு நல்ல பலனை தரும். சரி வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை தக்காளி - 2 மீடியம் ஸ்சைஸ்
தேன் - 1டேபிள் ஸ்பூன்

பச்சை தக்காளி பழங்களை எடுத்து அதனுடன் தேன் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். நன்றாக தண்ணீர் பதம் வரும் வரை அரைக்கவும் . இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.
மேலும் இந்த தக்காளி பழங்களை தோலை உரித்து விட்டு வெரிகோஸ் வெயின் ஏற்பட்ட இடத்தில் தேய்க்கவும் செய்யலாம்.
இந்த இயற்கை முறை வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்துகிறது என்பது நீருபிக்கப்பட்டுள்ளது. இதை தினமும் சரியான அளவில் எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்

அடர்த்தியான கூந்தலை பெற ...

இன்றைய கால கட்டத்தில் அடர்த்தியான கூந்தலை வளர்க்க அனைத்து பெண்களும் விரும்புகின்றனர். ஆனால், இன்றைக்கு மக்களிடம் நேரமும் இல்லை கூந்தலை பராமரிக்க முடியவும் இல்லை காரணம் இன்றைய வேலை சூழல், மனச்சிக்கல் ஆகும்.


அடர்த்தியான கூந்தலை பெற  நெல்லிக்காய், மருதாணி, செம்பருதிபூ, செம்பருத்தி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து நிழலில் காயவைத்து அதை சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு தேய்த்தால் முடி நன்கு அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளரும். மேலும் நரை முடியையும் கருமையாக்கும்.   

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த


சர்க்கரை நோய் இன்று வரும் நாட்களில் குடும்ப நோயாக மாறிவிட்டது. காரணம் இன்று நாம் பயன்படுத்திவரும் உணவும் நமக்கு எதிரியாக மாறிவிட்டது. ஒருவருக்கு வாழ்நாளில் ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை முற்றிலுமாக குணபடுத்த முடியாது. ஆனால், அதை கட்டுக்குள் வைக்க முடியும். இதற்கு நாம் செய்யவேண்டியது.



கஸ்துரி மஞ்சள்,நாவற்பலகொட்டைபொடி ,திப்பலி, வெந்தயம், சிறுகுறிஞ்சான்பொடிஆகியவற்றை சரி சமமாக எடுத்து அரைத்து பொடி செய்து வெறும் வயற்றில் காலை அரை தேய்க்கரண்டி எடுத்து வென்னீரில் கலந்து குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுபடுத்த முடியும். கண்டிப்பாக மாதம் ஒருமுறை நீங்கள் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.   

மலச்சிக்கலை போக்கும் குதிரைவாலி


பழமையான உணவுகளில் குதிரைவாலியை நம் முன்னோர்கள் முக்கிய உணவாக பயன்படுத்தி வந்தார்கள். இந்த குதிரைவாலி அரிசியை நாம் உணவில் எடுதுகொள்வதன் மூலம் மலச்சிக்கலை குணப்படுத்த முடியும். இந்த குதிரைவாலி இரண்டு வெவ்வெறு வகைகளில் கிடைக்கும். இதில் சிகப்பு அரிசி உடலுக்கு மிகவும் நன்மை தரவல்லது. வெள்ளை அரிசி தவிடு நீகிய அரிசியாகும் இதுவும் உடலுக்கு நன்மை தரவல்லது.


  குதிரைவாலி  அரிசியை நாம் சாதாரண சாதமாகவும் சமைத்து உண்ணலாம். பின்பு இதை உடைத்து ஊறவைத்து உப்புமாவும் செய்யலாம். மற்றும் இனிப்பு உணவான கேசரியாகவும் சமைக்கலாம்.கோதுமை மாவுடன் குதிரைவாலி சேர்த்து அரைத்து சப்பாத்தியாகவும் உண்ணலாம் . இதன் மூலம் மலச்சிக்கலை போக்கலாம்.